ரீயூனியன் தீவில் அனுபவங்கள்

தமிழர்களின் திராவிட கட்டடக் கலை இன்று பிரான்சு நாட்டின் 3 வது தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகில்இருக்கும் பிரெஞ்சுத் தீவாகிய ரீயூனியன் தீவில் பிரெஞ்சு அரசின் சுற்றுலாத்துறையின் அழைப்பின் பேரில் அங்கு நடக்கும் தீபாவளி தேசிய விழாவில் கலந்து கொள்வதற்காக நான் சென்றேன். ரீயூனியன் தீவில் பிரெஞ்சு உச்சரிப்பில் “தமுழ் “ என்று அழைக்கப்படும் தமிழ் வம்சாவழியினர் பிரெஞ்சுக்காரர், சீனர், கருப்பினத்தவர் ஆகியோருடன் கலந்து மிக இணக்கமாக வாழ்ந்து வரும் உண்மையான பன்முகப் பண்பாட்டுக் கலப்பு ( Real multi – cultural mix ) ஒன்றை உருவாக்கி இருப்பதைக் கண்டேன். அப்போது அங்கு வாழும் தமிழர்களின் சுதைச் சிற்ப வேலைப்பாடுள்ள திராவிடக் கட்டடக் கலையின் அடையாளமாகத் திகழும் நரசிங்க பெருமாள் கோயிலை எனக்குக் காட்டினார்கள். தமிழனின் திராவிடக் கட்டடக்கலையின் அடையாளமாகிய இந்தக் கோயில் மொத்த பிரான்சு நாட்டின் 3வது தேசியப் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காணொளி ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Le temple Péroumal de Saint-Pierre 3ème monument des Français
La Réunion lé la ! Le temple Péroumal de Saint-Pierre se classe 3ème monument des Français

https://www.facebook.com/watch/?v=1029241924184137&extid=SS9rALUmWN9Ranui