பரிசுத்த ஆவிகள் / இந்திரன்

என்னால் நேரில் சந்திக்க முடியாத
கொடுமையான பல ஆட்சியாளர்களை
நான் நரகத்தில் சந்தித்து
ஆசைதீர நாலு வார்த்தை திட்டலாம் என்ற
கனவில் இருந்தேன்.
நரகத்துக்கு வந்து பார்த்தால்தான் தெரிகிறது
அவர்கள் எல்லோரும்
சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்பது.
21 செப்டம்பர் 2020

18 ஆண்டுகளுக்கு முன் அதிரடி அழகியல்: காமிக்ஸ் புத்தகக் கார்ட்டூனை யாராவது கவிதை நூலில் வைப்பார்களா? 2002இல் ” மின்துகள் பரப்பு” ( Electro magnetic field ) – இந்திரன் – யாளி பதிவு வெளியீடு. அதிரடி அழகியல் பேசும் எனது கவிதை நூலில் வைத்தேன். டின்டின் காமிக்ஸ் நூலில் வரும் ஒரு படத்தில் ஒரு மியூசியத்தில் டைனோசரின் பெரிய எலும்புக் கூடு இருக்கிறது.அதன் கால் எலும்பு ஒன்றை டின் டின் வளர்க்கும் நாய் கவ்விக் கொண்டு போய் கொடுக்கிறது. இதைப்பார்க்கும் அருங்காடசியகக் காவலாளி திகைக்கிறார். இதை என் கவிதை நூலில் வெளியிட்டு ” பழைய எலும்புத் துண்டுகள் இன்றைய கவிஞனுக்கு போதுமானவை அல்ல.” என்று என்னுடைய அறைகூவலை வைத்திருந்தேன்.18 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அதிரடி அழகியல் கொண்ட என் புத்தகத்தைப் பற்றி இன்று வரை –கவிஞர் சிற்பி, கவிஞர்