இந்திரன் காலம்

இந்திரன் தான் வாழ்ந்த காலத்தை இங்கே பதிவு செய்கிறார். அவர் நேரில் சந்தித்துப் பழகிய நக்சலைட் நாயகர் சாரூ மஜும்தார், ஓஷோ ரஜ்னீஷ், சினிமா மேதை மிருணாள்சென், இந்தோ – ஆங்கிலக்கவி நிசிம் எசிகில், புரட்சிக் கலைஞர் த. ஜெயகாந்தன், கி.ரா., எஸ்.பொ.மீரா என்று அபூர்வ மனிதர்கள் ரத்தமும் சதையுமாய் நம்மிடையே உலவத் தொடங்குகிறார்கள். சீனப் படையெடுப்பிலிருந்து, இந்தி எதிர்ப்பு வரை எமெர்ஜென்சி தொட்டு கீழ்வெண்மணி சோகம் வரை ஈழத்தமிழர் பிரச்சினை தொட்டு சுனாமி வரை சால்வடோர் டாலியின் பிரபஞ்சம் தொட்டு பத்தூர் நடராசர் பிரச்சினை வரை அவர் எதிர்கொண்ட விதம் பற்றி எழுதுகிறபோது இந்திரனின் காலம் உயிர்பெற்று எழுகிறது